தமிழக அரசியல் கட்சிகள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. திமுகவிலிருந்து விலகிய பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம்
திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு. க., Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால்தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னையில் செப்டம்பர் 17, 1949இல் [4] கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக திரு.அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, திமுகவின்கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ்
TNCC இன் சமூகக் கொள்கையானது சர்வோதயாவின் காந்திய கொள்கையின் அடிப்படையில் (சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் மேம்படுத்துவது) அடிப்படையாக உள்ளது. குறிப்பாக TNCC, சமூகத்தின் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படாத மற்றும் சமூக ரீதியாக பாரபட்சமற்ற பிரிவுகளின் உயிர்களை மேம்படுத்த கொள்கைகளை வலியுறுத்துகிறது. கட்சி பிரதானமாக சமூக தாராளவாதத்தை ஆதரிக்கிறது (தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் சமூக நீதிகளை சமன் செய்ய முற்படுகிறது).
பாரதிய ஜனதா கட்சி
ஜனதா கட்சி உடைத்த பின் முன்பிருந்த ஜனசங்கம் புது வடிவம் பெற்றது.அது பாரதிய ஜனதா கட்சி என்ற புதுப் பெயருடன் 1980 ஏப்ரல் மாதம் தோன்றியது . அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் முதல் தலைவரானார்.
முன்பிருந்த கட்சியின் காவிக்கொடி இப்போது காவியும், பச்சையும் கொண்ட கொடியாக மாறியது. முன்பு கட்சியின் வழிகாட்டுக் கொள்கையாக ‘ஒன்றிணைந்த மானுட வாதம்’ இருந்தது. இப்போது அது ‘காந்தீய சோசலிச’மாக மாறியது.
இவையெல்லாம் கட்சி உறுப்பினர்கள் ஜனதா கட்சியிலும் , ஜே . பி இயக்கத்திலும் அடைந்த அனுபவத்தின் தாக்கமே.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ( ம. தி. மு. க., Marumalarchi Dravida Munnetra Kazhagam ) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1993 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வை. கோபால்சாமி உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளைக் காப்பதற்காக, ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994 ஆம் ஆண்டு மே 6 ஆம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தது.
தேசிய முற்போக்கு திராவிட கழகம்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) செப்டம்பர் 14, 2005 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும்.
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய தமிழ்நாட்டை முதன்மையாக கொண்ட அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி மே மாதம் 18 ஆம் நாள் 2010 ஆம் ஆண்டில் சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் (Dalit Panthers or Viduthalai Siruthikal) தமிழ் நாட்டு மாநில அரசியல் கட்சி ஆகும். இது 1970களில் மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தலித்து சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டிலும் தலித்து சிறுத்தைகள் இயக்கம் என்ற பெயரிலேயே மலைச்சாமி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. மலைச்சாமி செப்டம்பர் 1989 தான் இறக்கும் வரை இதன் மாநிலத்தலைவராக இருந்தார்.[1] இக்கட்சி தலித் மக்களின் பிரச்சினைகளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது. தலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட பொழுது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில்மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொல். திருமாவளவன் அதன் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
No comments:
Post a Comment